தினகரன் அணி எம்எல்ஏக்கள் பதவி இழக்கும் அபாயம்

சென்னை: தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு 1 9 எம்எஎல்ஏக்களும் ஒரு வாரத்திற் குள் பதிலளிக்க வேண்டுமென சட்டமன்றத் தலைவர் பி. தனபால் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி யிருப்பதே அதற்கு காரணம். அரசு கொறடா எஸ். ராஜேந் திரனின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத் தலைவர் இந்த நட வடிக்கையை எடுத்துள்ளார் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நீக்க வேண்டுமென டிடிவி தினகரன் ஆதரவு எம்எல் ஏக்கள் 19 பேரும் ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் கடிதம் அளித்த தைத் தொடர்ந்து அவர்களைத் தகுதியிழக்கச் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார். கடந்த வியாழக்கிழமை இதன் தொடர்பில் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அவர் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதையடுத்து ஒரு வாரம் கெடு விதித்த பேரவைத் தலைவர் தன பால், தங்களுடைய செயலுக்கு 19 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.