கொள்கையைக் கைவிட்டார் நயன்தாரா

நயன்தாராவும் தெலுங்கு படங்களில் நடிக்க முழு வீச்சில் இறங்கியிருப்பதால் தெலுங்கு நடிகர்களின் படங்களைக் கைப்பற்று வதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக் குமாரின் இயக்கத்தில் பால கிருஷ்ணா நடிக்க இருக்கி றார். இது அவருக்கு 102வது படம். இதற்கு முன்பு பால கிருஷ்ணாவுடன் நயன்தாரா நடித்திருந்த ‘சிம்ஹா’, ‘ஸ்ரீ ராமராஜ்ஜியம்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. அதனால் நயனுக்கு ஆந்திராவில் பெண் ரசிகைகள் அதிகமாகிவிட்டார்களாம். அதை மனதில்கொண்டு அவரது கதாபாத் திரத்தில் உருக்கமான காட்சிகள் அதிகமாகச் சேர்த்து வருகிறார்களாம் தெலுங்கு இயக்குநர்கள். மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிக்க சம்மதித்ததால் நயன்தாரா உயர்த்திய சம்பளத்தைக் கொடுக்க ஆந்திர திரையுலகம் தயாராக இருக்கிறதாம். இது மற்ற நடிகைகளுக்கு எரிச்சலைக் கிளப்பி இருக்கிறது.