அஞ்சலிக்காக ராம் உருவாக்கும் படம்

ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்த அஞ்சலி, அதன்பிறகு வசந்த பாலன் இயக்கிய ‘அங்காடித்தெரு’ மூலம் புகழ்பெற்றார். தற்பொழுது ஜெய்யுடன் ‘பலூன்’ படத்தில் நடித்திருப்பவர், ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் ‘பேரன்பு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஒரு சிறப்புக் காட்சியில் அஞ்சலி நடித்திருந்தார். இதுபற்றி இயக்குநர் ராம் கூறுகையில், “அஞ்சலி எனது படத்தில்தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே அஞ்சலி மிகச்சிறப்பாக நடித்தார். அதனால் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. “அதோடு ‘தரமணி’ படத்தில் அவர் நடித்தால் வியாபார ரீதியாக பயனாக இருக்கும் என்று அவரிடம் கேட்டேன். துளியும் யோசிக்காமல் வந்து நடித்துக் கொடுத்தார். இப்போது ‘பேரன்பு’ படத்தில் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடினமான காட்சியில் கூட எளிதாக நடித்துவிடும் அஞ்சலிக்கு ‘பேரன்பு’ படம் நல்ல பெயரைக் கொடுக்கும்.

Loading...
Load next