சுடச் சுடச் செய்திகள்

இதுதான் உண்மையான வெற்றி: புகழும் திரையுலகம்

தமிழ்த் திரையுலகில் சுமார் ரூ.100 கோடி, ரூ.200 கோடி வரவு செலவுத் திட்டத்தில் படங்கள் தயாரிக்கப்பட்டு அது ரூ.150 கோடி வசூல் செய்கிறது. அதுபோன்ற படங்கள் உண்மையில் வெற்றியே இல்லை. இத்தகைய பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பல படங்கள் படுதோல்வி அடைந்திருக்கின்றன. அதனால் பலர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு தெருக்கோடிக்கே வந்திருக்கின்றனர். ஆனால் இவரது படமா? துணிந்து வாங்கலாம்; வெளியிடலாம் என்ற நம்பிக்கை யைக் கொடுத்திருப்பது விஜய் சேதுபதியின் படங்கள்தான். இவருடைய படங்கள் இதுவரை அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படவில்லை. தற்பொழுது வெளியாகி இன்னும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் ‘விக்ரம் வேதா’ படம் குறைந்த பட்சம் ரூ.10 கோடி செலவில் உருவானது.

அந்தப் படம் தற்பொழுது செலவுகள் போக ரூ.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து இருக்கிறது. ஒரு படத்தின் உண்மையான வெற்றி இதுதான் என்றும் ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்து அந்தப் படம் ரூ.150 கோடி வசூல் செய்தாலும் இந்த வெற்றிக்கு ஈடாகாது என்றும் திரையுலகினர் தைரியமாகக் கூறி வருகின்றனர். சில நடிகர்கள் மசாலா படங்களில் நடித்துவிட்டு, அர்னால்டு அளவுக்கு ‘பில்டப்’ கொடுத்து வரும் நிலையில், அழுத்தமான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்துவிட்டு சத்தமில்லாமல் இருக்கும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடம் இப்போது நல்ல வரவேற்பு நிலவுகிறது. அதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகின்றது. அதனால் அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon