நில விலையைக் குறைக்கவும்: மத்திய கொள்கைக் குழு

புதுடெல்லி: எல்லா மக்களும் வீட்டு வசதியைப் பெறும் வகையில் நிலத்தின் விலையைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய கொள்கைக் குழு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழு வெளியிட்ட மூன் றாண்டுத் திட்ட அறிக்கையை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டார். இந்தியாவில் நிலத்தின் விலை அதிகமாக இருப்பது, ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் முக்கிய பிரச்னையாக உள்ளது. மேலும், நகர் பகுதிகளில் வீட்டு வாடகை அதிகம் இருப் பதற்கும் நில விலை உயர்வுதான் முக்கிய காரணமாக உள்ளது. இதனால்தான் நகரங்களுக்கு குடிபெயரும் ஏழை மக்கள் குடிசைகளை அமைத்து வாழ வேண்டியுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நில விற்பனை, கட்டுமானத் துறைகளில் கருப்புப் பணம் அதிக அளவில் புழங்குவதே நிலம், வீடுகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பெரும்பாலான கருப்புப் பணம் வீடுகளில்தான் முதலீடு செய்யப் படுகிறது. இதனால் சமூகத்தின் ஒரு தரப்பினர் வீடுகளாக வாங்கிக் குவிக்கின்றனர். அதேநேரத்தில் லட்சக் கணக் கான குடும்பங்கள் சொந்தமாக ஒரு சிறிய வீடுகூட இல்லாமல் உள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது. இப்போது கருப்புப் பணத்தின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக் கைகளின் தொடர் விளைவாக நிலத்தின் விலையும் குறையும். இதனால் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று மத்திய கொள்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon