ஆட்சியைத் தக்கவைக்க பழனிசாமி அணி அதிரடி

தமிழக அரசியல் களம் அண்மைக் காலமாக மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. முதல்வர் எடப் பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் அணியும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர மாக முயன்று வருகின்றன. ஆனால், இந்த இருதரப்பின ருக்கும் கடும் நெருக்கடி கொடுக்க பழனிசாமி அணி தயாராகி வரு கிறது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான ஜூலை 19ஆம் தேதி திமுக ஒரு பிரச் சினையை எழுப்பியது. தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போன்ற போதைப்பொருட்கள் நகர மெங்கும் தாராளமாகக் கிடைப் பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்தார். அத்துடன், ‘குட்கா’ உள்ளிட்ட போதைப்பொருட்களின் பொட் டலங்களை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத் திற்குக் கொண்டு வந்து காண்பித்தனர்.

அதற்கு அரசின் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தடை செய்யப்பட்ட பொருட்களை சட்ட மன்றத்திற்குள் கொண்டு வந்தது மன்றத்தைக் களங்கப்படுத்தும் செயல் என முதல்வர் பழனிசாமி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக உறுப்பினர்களின் நடவடிக்கையை சட்டமன்ற உரிமைக்குழு விசார ணைக்கு அனுப்புவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். துணை சபாநாயகர் தலை மையிலான உரிமைக் குழுவின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. 20 திமுக எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக் கப்படுகிறது. அந்த உறுப்பினர் கள் அனைவரும் சட்டமன்றக் கூட்டங்களில் பங்கேற்க இயலாத வாறு இடைநீக்கம் செய்யப்பட லாம் என்று கூறப்படுகிறது. பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அது கைகொடுக்கும் என்று நம்பப்படு கிறது. மேலும், இவ்வாறு செய் வதன் மூலம் திமுகவும் தினகரன் அணியும் எடுத்து வரும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை விழும் என்று கூறப்படுகிறது.