சான்: ஒன்றுபட்டு சவால்களை எதிர்கொள்வோம்

வெற்றி என்பது ஒருவர் வெளிப் படுத்தும் கடினமான உழைப் பாலும் அவரது அறிவாற்றலாலும் பெற்றது என்றாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங் களை மேம்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறையினரை வழி நடத்திச் செல்வதில்தான் அவர் களது ஆற்றல் உள்ளது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் மாணவர்களிடம் கூறினார். நேற்றிரவு தமிழர் பேரவை மற்றும் அதன் இணை அமைப்பு கள் நடத்திய 52வது தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், 1965ஆம் ஆண்டில் மிகப்பெரிய சவால்களோடு இந்த நாட்டை வழிநடத்தப் போராடிய நமது முன் னோடித் தலைவர்களை நினைவு கூர்ந்தார். கடின உழைப்பையும் கடப் பாட்டையும் மக்கள் ஒற்றுமை யையும் மட்டுமே கருவிகளாகக் கொள்ளாமல் நினைத்ததை அவர்கள் முடித்துக் காட்டி சிங்கப்பூரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்த்திக் காட்டியி ருக்கிறார்கள் என்றும் திரு சான் கூறினார்.

அதுபோலவே இன்றைய மாண வர்களும் அவர்களை எடுத்துக் காட்டாகக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கல்வி உன்னத விருது பெற்ற மாணவர்களை அமைச்சர் சான் சுன் சிங் வாழ்த்தினார். படம்: திமத்தி டேவிட்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon