பாலியல் சாமியாரின் மடங்களில் அதிரடி சோதனை

சனிக்கிழமை பிற்பகலில் வன் முறை கட்டவிழ்த்து விடப்பட்டு தீ வைப்புச் சம்பவங்கள் பெருகிய வடஇந்தியாவின் பஞ்ச்குலா நகர் நேற்று அமைதியாகக் காணப்பட் டது. பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வீதிகளில் ராணுவ ரோந்து அதிகமாகக் காணப்பட் டது. வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை நாசப்படுத்திய கும் பல் தேடப்பட்டு வருகிறது. ஆன் மீக குரு என்று தன்னைத்தானே பிரபலப்படுத்திக்கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங் பாலியல் குற்ற வாளி என்ற பஞ்ச்குலா சிபிஐ நீதி மன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது சீடர்கள் வன்முறையில் இறங்கினர்.

கண்மூடித்தனமான தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட் டனர். 28 வாகனங்கள் கொளுத்தப் பட்டன. அவற்றில் பெரும்பாலா னவை ஊடகத்தினருக்குச் சொந்த மானவை. நேற்று காலை வரை 524 பேரை ஹரியானா போலிசார் கைது செய் தனர். ராம் ரஹிம் சிங் தலைவராக உள்ள ‘தேரா சச்சா சௌதா’ ஆன்மீக மையம் ஹரியானாவின் சிர்சா நகரில் அமைந்துள்ளது. ராணுவமும் போலிசும் தேடுதல் வேட்டையில் இறங்கியதும் கிட்டத் தட்ட நூறாயிரத்துக்கு மேற்பட்டவர் கள் இந்த மையத்திற்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். அவர்களைத் துரத்தியடிக்கும் வண்ணம் அந்த தலைமையகத்துக்குள் ராணுவமும் அதிரடிப் படையினரும் நேற்று நுழைந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்தது.

வன்முறை கட்டுக்குள் வந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் துணை ராணுவப் படையும் போலிசும் நேற்று அணிவகுப்பு நடத்தின. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon