நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருப்போம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன் னோர் கூறுவர். நாம் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ, சுகாதாரமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண் டியது இன்றியமையாதது.

இன்று நம் குடியரசில் மூத்தோரைப் பெரிதும் பாதித்து வரும் நீரிழிவு குறித்து நாம் அனைவரும் கவனமாக இருந்து அடுத்த தலைமுறையினருக்கும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது என்று பிரதமர் லீ சியன் லூங், தம்முடைய தேசிய தினப் பேரணி உரையில் வலியுறுத்தி உள்ளார். இன்னும் சொல்வ தாயின் மூத்தோரையே நீரிழிவு அதிகம் பாதித்துள்ளது என்றாலும் இளையர்களிடமும் அது தலைகாட்டத் தொடங்கியிருப்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டத் தவற வில்லை. சிங்கப்பூரர்களில் ஒன்பது பேரில் ஒருவர் நீரிழி வால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்குள்ள நான்கு இன மக்களில் பத்துச் சீனர்களில் இரண்டரை பேருக்கும் பத்து மலாய்க்காரர்களில் ஐவருக் கும் பத்து இந்தியர்களில் அறுவருக்கும் நீரிழிவு பாதிப்புள் ளதாகப் பிரதமர் கூறியது கேட்டு பலரும் வியப்படைந்தனர். இதற்குப் பாரம்பரியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் சுகாதாரமான வாழ்க்கைமுறையைக் கடைப் பிடித்தால் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் பிரதமர். ஆண்டுக்கு இருமுறை தமக்கு நீரிழிவு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளும் பிரதமர், நீரிழிவு என்பது ஆபத்தான ஒரு பிரச்சினை என்பதோடு அது ஒரு கசப்பான உண்மை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

நீரிழிவு என்பது, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு என மரணம் விளைவிக்கும் பல நோய் களுக்கு மூலகாரணமாகவும் இருக்கிறது. நீரிழிவு அதிகம் உள்ளோருக்கு புண் ஏற்பட்டால் அது எளிதில் ஆறுவ தில்லை. சிலருக்கு கை கால்கள் துண்டிக்கப்படவேண்டிய நிலையும் ஏற்படுவதுண்டு. கண் பார்வை பாதிப்படைகின் றது. ஆண்மைக் குறைபாட்டையும் ஏற்படுத்தக்கூடும். சிங்கப்பூரர்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்ந்து, உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபட வேண்டுமென்பதை மருத்துவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பள்ளிக்கூடங் களில்கூட சிறார்களுக்கு இனிப்புப் பானங்கள் விற்கப் படுகின்றன. நாம் ஆரோக்கிய உணவு முறையைக் கடைப் பிடித்தாக வேண்டும் என்பதைப் பிரதமர் தம்முடைய உரையில் வலியுறுத்திய பின்னர், பல சுவைபான நிறுவனங்கள் சீனி அளவைக் குறைக்க முன்வந்திருப்ப தைப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

சாதாரண வெள்ளை ரொட்டியைக் கைவிட்டு முழு தானிய ரொட்டியை உண்பதைப் பிரதமர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதைக் கருதிப் பார்க்க வேண்டும். அது மட்டுமன்றி, வெள்ளை அரிசியைக் காட்டிலும் தீட்டிய அரிசியைத்தான் சுகாதாரமிக்கதாகப் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். பாலும் சீனியும் இல்லாத தேநீர் அருந்தும் பிரதமர் தம்மை ஓர் எடுத்துக்காட்டாக முன்னுதாரணப் படுத்தி, குறைவாக உண்டாலும் சுகாதாரமான உணவை உண்ண வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறத் தவறவில்லை.

வெள்ளை அரிசியை தீட்டிய அரிசியுடன் கலந்து உண்ணலாம் என்றும் கூறிய திரு லீ, தானியங்கள் கலந்த அரிசியையும் உண்ணலாம் என்றார். வீட்டில் சமைப்போர் குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி வருவதோடு, சீனியையும் உப்பையும் குறைத்து சமைக்கலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.

சென்ற ஆண்டு, அரசாங்கம் நீரிழிவுக்கு எதிராகப் போர் தொடுத்ததைச் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை. சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 82 ஆண்டாக உயர்ந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி தரும் தகவல்தான் என்றாலும் அந்த முதுமைக் காலத்தில் நோயால் பீடிக்கப் படக்கூடாது என்பதை பிரதமர் ஆதங்கத்தோடு கூறினார். சிங்கப்பூரில் நீரிழிவுப் பிரச்சினை மேலும் பெருகாமல் இருப்பதற்கு, அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர், வழக்க மான சுகாதாரப் பரிசோதனைக்குச் செல்வதில் தயக்கம் காட்டாமல் சுகாதார அமைச்சின் வாழ்நாள் பரிசோதனைத் திட்டத்தையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர்.

பொதுமக்களில் பலர் நீரிழிவு பிரச்சினையை மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததுதான் பெரிய ஆதங்கமாக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!