தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சிறப்புப் பயிற்சி

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல் லூரி ஊட்டச்சத்து குறித்து இரு புதிய ஒரு நாள் பாடங்களைத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரர்கள் அவர்களது சுகாதாரத்தைப் பேணிக் காத்து வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையில் வலியுறுத்தியதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ‘நீரிழிவைத் தவிர்ப்பதற்கான ஊட்டச்சத்து முறை’ எனும் தலைப்பு கொண்டுள்ள அந்தப் பாடங்களில் ஒன்று நேற்று நடத்தப் பட்டது. அதில் சுகாதாரப் பராம ரிப்பு நிபுணர்கள், நோயாளியைப் பராமரிப்பவர்கள் என ஏறக்குறைய 15 பேர் கலந்துகொண்டனர். நீரிழிவு பாதிப்பு, இதர நாட்பட்ட நோய்களைத் தடுப்பதில் பொது மக்கள் ஆரோக்கிய உணவுமுறை யைக் கடைப்பிடிக்க இந்தப் பாடம் உதவும் என்று கூறினார் தெமா செக் பலதுறைத் தொழிற்கல்லூரி யின் செயல்முறை ஊட்டச்சத்துப் பிரிவின் தலைவர் டாக்டர் கல்பனா பாஸ்கரன்.

சிங்கப்பூர் நீரிழிவு சங்கத்தின் உறுப்பினர்களான (இடமிருந்து) திரு மைக்கல் லீ, திருவாட்டி ஹெலன் சுவா இருவரும் நேற்று தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற நீரிழிவைத் தவிர்ப்பதற்கான ஊட்டச்சத்து முறை பயிற்சியில் ஆரோக்கியமான சமையலுக்கான பொருட்களைத் தயார் செய்கின்றனர். இடமிருந்து நான்காவதாக இருப்பவர் சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கத்தின் துணைத் தலைவரும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் செயல்முறை ஊட்டச்சத்துப் பிரிவின் தலைவருமான டாக்டர் கல்பனா பாஸ்கரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon