அதிபர் தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை சோதனை

சிங்கப்பூரில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக நேற்று குடி யிருப்பாளர்கள் புதிய கணினிப் பதிவு வாக்களிப்பு முறையை பரிசோதித்துப் பார்த்தார்கள். குடியிருப்பாளர்கள் போலியான அடையாள அட்டைகளை ஒரு தேர்தல் அதிகாரியிடம் கொடுத் தனர். அந்த அதிகாரி மடிக் கணினியில் குடியிருப்பாளரின் வருகையைப் பதிவு செய்தார். பிறகு குடியிருப்பாளர்களிடம் வாக்குச்சீட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அந்த அதிகாரி ஆலோசனை கூறினார். இந்தப் பரிசோதனை தியோங் பாரு சமூக நிலையத்தில் அமைக் கப்பட்டிருந்த ‘வாக்குச்சாவடியில்’ இடம்பெற்றது. தேர்தல் துறை நேற்று ஐந்து இடங்களில் சாலை காட்சி நடத்தியது. அதிபர் தேர்தலில் இடம்பெறக் கூடிய இந்தப் புதிய கணினிப் பதிவு முறை பற்றி குடியிருப்பாளர் களுக்கு விளக்குவது அந்தச் சாலைகாட்சியின் நோக்கம்.

அடுத்த மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் மலாய் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். அத்தேர்தலில் வாக்களிக்க குறிப்பிட்ட தொகுதிகளில் கணினிப் பதிவு முறை என்ற புதிய முறை முன்னோடி அடிப்படையில் சோதித்துப் பார்க்கப்படும். படம்: தேர்தல் துறை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon