இரு கல்லீரல் அறுவை சிகிச்சையால் ஹாங்காங்கில் பெண் தாய்

ஹாங்காங்: இரு கல்லீரல் அறுவை சிகிச்சைகளை இவ்வாண்டு மேற்கொண்ட 43 வயதான தாய் ஒருவர் ஹாங்காங்கில் நேற்று காலை மரணம் அமடைந்தார். டாங் குவாய் ஸி எனப்படும் அம்மாதுக்கு அவரது 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகக் கொடுக்க முன்வந்த போதிலும் இன்னும் அந்த வயதை எட்ட மூன்று மாதங்கள் இருப்பதால் கல்லீரல் தானம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அம்மாது உயிரிழந் தார். அத்துயரச் சம்பத்திற்காக தாம் வருந்துவதாகவும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தலைமை நிர்வாகி கேர்ரி லாம் கூறினார். அந்தத் தாய் கவலைக்கிடமாக இருக்கும்போது அவரது மகளின் மன வலிமை யையும் நிதானத்தையும் கண்டு தான் வியந்ததாகவும் அது தனக்கு பெரிய தாக்கத்தை ஏற் படுத்தியதாகவும் லாம் கூறினார்.

Loading...
Load next