கடைசி நகரான டல் அஃபாரை கைப்பற்றியது ஈராக்கியப் படை

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த கடைசி நகரான அல் அஃபாரை ஈராக்கியப் படை கைப்பற்றி யுள்ளதாக ஈராக் ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார். அந்நகரில் பதுங்கியிருந்த போராளிகள் அனைவரும் விரட் டியடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார். போராளிகள் வசம் இருந்த நகரங்கள் மீட்கப்பட்ட போதி லும் ஈராக்கின் வடபகுதியில் போராளிகளுக்கும் ராணுவத் தினருக்கும் இடையே சண்டை நடப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் முழு வெற்றி கிட்டும் என்று ஈராக்கியப் படை தெரிவித்துள்ளது. போராளிகள் வசம் இருந்த மோசுல் நகரை ஈராக்கியப் படையினர் ஆறு வாரங்களுக்கு முன்பு கைப்பற்றினர். அந்த வெற்றிக்குப் பிறகு இப்போது டல் அஃபார் நகரமும் ஈராக்கியப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நகரில் வசித்த மக்கள் இங்கு சண்டை தொடங்குவதற்கு முன்னரே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ‌ஷியா பிரிவினர் என்று கூறப் பட்டது.