வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சோல்: வடகொரியா மீண்டும் நேற்று ஏவுகணை சோதனை களை மேற்கொண்ட தாக அமெரிக் காவும் தென்கொரி யாவும் தெரிவித் துள்ளன. அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் வடகொரியா மீண்டும் மூன்று குறுந்தொலைவு ஏவு கணைகளை சோதனை செய்திருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித் தது. அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனைகளை மேற் கொண்டுள்ளது. வடகொரியாவின் நேற்றைய ஏவுகணை சோதனைகள் அனைத்தும் தோல்வி அடைந்த தாக அமெரிக்கா தெரிவித் துள்ளது. வடகொரியாவின் காங்வான் மாநிலத்தில் இருந்து நேற்று காலை செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று கடலில் விழுந்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Loading...
Load next