பிரசல்ஸில் கத்தியால் தாக்கியவர் சுட்டுக்கொலை

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரை கத்தியால் தாக்கிய ஆடவர் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த 39 வயது ஆடவர் பின்னர் மருத்துவ மனையில் உயிரிழந்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின. ஐரோப்பிய நாடுகளில் அண்மைய காலமாக பயங்கரவாதத் தாக்கு தல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அனைத்து நாடு களிலும் பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், பிரசல்ஸ் நகரின் மையப்பகுதியில் போலிசாரை குறிவைத்து அத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை போலிசார் சுற்றி வளைத்தனர். வெள்ளிக்கிழமை தாக்குதலில் ஈடுபட்ட அந்த ஆடவர் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் தேடப்பட்டவர் அல்ல என்று போலிசார் கூறினர். வெள்ளிக்கிழமை நடந்த அத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று அரசாங்கத் தரப்பு அலுவலகம் தெரிவித்தது.

பிரசல்ஸ் நகரின் மையப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரை ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கியயைத் தொடர்ந்து அந்த இடத்தில் போலிசாரும் ராணுவ வீரர்களும் குவிந்துள்ளனர். அந்த ஆடவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next