தமன்னா இடத்தைப் பிடித்த காஜல் அகர்வால்

தமிழில் உருவாகவிருக்கும் ‘குயின்’ படத்தில் இருந்து தமன்னா விலகியிருக்கிறார். அவருக்குப் பதில் கங்கனா ரணவத் வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அதுபோல் படத்தின் இயக்கு னரும் மாற்றப்பட்டுள்ளார். சுஹாசினி வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படம் தொடங்கத் தாமத மாகிக் கொண்டே இருந்ததால் கங்கனா ரணவத் கதாபாத் திரத்தில் நடிக்கவிருந்த தமன்னா விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். ‘குயின்’ படத்தின் கதையை அப்படியே தென்னிந்திய கலா சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்க உள் ளார்கள். அக்டோபர் மாதம் மதுரையில் படப் பிடிப்புத் துவங் குவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை படப்பிடிப்பைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீசில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. மார்ச் 2014ல் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் விமர் சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.