அயல்நாட்டு மண்ணில் அதிக தங்கம் வென்ற சிங்கப்பூர் குழு

கோலாலம்பூர்: வெளிநாட்டு மண்ணில் நடந்த தென் கிழக்காசியப் போட்டிகளில் இவ்வாண்டு சிங்கப்பூர்க் குழு அதிக தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி களின்போது சிங்கப்பூர் 43 தங்கப் பதக்கங்கள் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. நேற்று நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலின் மகளிர் பிரிவில் குவா ஜிங் வென் தங்கம் வென்றதும் சிங்கப்பூரின் தங்க எண்ணிக்கை 44ஆக உயர்ந்தது. இதற்கிடையே, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர்க் குழு கோல்ஃப் விளையாட்டில் தாய்லாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. அதுபோல், மேசைப்பந்து விளையாட்டிலும் 3=0 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி சிங்கப்பூர்க் குழு தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. மேசைப்பந்து விளையாட்டில் சிங்கப்பூர்க் குழு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon