டெம்பெலேவை வாங்குகிறது பார்சிலோனா காற்பந்துக் குழு

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து குழுக்களில் ஒன்றான பார்சி லோனா, டோர்ட்மண்ட் குழு வீரர் உஸ்மான் டெம்பெலேவை வாங்க இருக்கிறது. டெம்பெலேவை 96.8 மில்லியன் பவுண்டுக்கு அக்குழு வாங்க உள்ளது. கூடுதல் ஊக்கத் தொகையையும் சேர்த்தால் அவரது விலை 135.5 மில்லியன் பவுண்டை எட்டும் என்று டோர்ட்மண்ட் குழு கூறியுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பார்சிலோனா குழுவின் முன்னாள் வீரரான நெய்மாருக்கு அடுத்து அதிக விலைகொடுத்து வாங்கப் படுபவர் என்ற பெருமையைப் பெறுவார் டெம்பெலே. அண்மையில் நெய்மாரை பிஎஸ்ஜி குழு 200 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது. இந்நிலையில், அவருக்குப் பதில் வேறு ஆட்டக்காரரை வாங் கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது பார்சிலோனா. ஏற்கெனவே டெம்பெலேவை வாங்கும் பார்சிலேனாவின் முயற் சியை டோர்ட்மண்ட் குழு நிரா கரித்திருந்த நிலையில், அதன் முயற்சி தற்போது வெற்றி அடைந் துள்ளது. மேலும் டெம்பெலேவின் விற் பனை விலையை 369 மில்லியன் பவுண்டாக நிர்ணயித்துள்ளதாக வும் பார்சிலோனா தெரிவித்து உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon