தங்கத்தை தக்கவைத்த சாகச மங்கை சாஷா

கோலாலம்பூர்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி களில் நீர் விளையாட்டில் சாகசம் புரிந்து தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார் சிங்கப்பூர் வீராங்கனை சாஷா கிறிஸ்டியன். 2011, 2015ஆம் ஆண்டு களிலும் சாஷா தங்கத்தைக் கைப்பற்றியிருந்தார். ‘வேக்போர்டு’ பிரிவில் நேற்று நடந்த இறுதிச் சுற்றில் 24 வயது சாஸா 62.78 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இப்போட்டியில், தடை களைக் கடந்து செல்லுதல் எனும் பிரிவிலும் அவர் முதல் இடத்தைப் பிடித்தார். முன்ன தாக, வெள்ளிக்கிழமை நடந்த முதல் சுற்றில் 2.5 சுற்றுகள் சென்ற அவர், நேற்றைய இரண்டாவது நாள் போட்டியில் மூன்று சுற்றுகள் வந்தார். 36.89 புள்ளிகள் பெற்று மூன்றாவதாக வந்த மற்றொரு சிங்கப்பூர் வீராங்கனை கூய் ஜியா யி வெண்கலப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தோனீசிய வீராங்கனை 47.67 புள்ளிகள் பெற்று இருந்தார். இதே போட்டியின் ஆடவர் பிரிவில் சிங்கப்பூர் வீரர் சேமுவல் சுவா ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

நீர்ச்சறுக்கு சாகச விளையாட்டில் ‘வேக்போர்டு’ பிரிவில் இம்முறையும் தங்கப் பதக்கம் வென்றார் சிங்கப்பூர் வீராங்கனை சாஷா கிறிஸ்டியன். படம்: இணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon