பீகார் ரூ.1000 கோடி ஊழல் விசாரணை தொடங்கியது

லக்னோ: பீகாரில், பாகல்பூரில் உள்ள ஸ்ரீஜன் தொண்டு நிறு வனம் அரசாங்க நிதி சுமார் ரூ.1000 கோடியை பணப் பரிமாற் றம் மூலம் ஊழல் செய்துள்ளது குறித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த ஆகஸ்ட் 17ஆ-ம் தேதி சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். இந்த ஊழல் வழக்கில் போலிசார் ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வங்கிகளில் செலுத்தப்பட்ட அரசாங்க பணத்தை அனைத்து மாவட்ட நீதிபதிகளும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தொண்டு நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்று கொண்டு விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 10 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கை பீகார் மாநிலத்தில் பொருளாதார குற்றவியல் பிரிவு போலிசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்ரீஜன் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மனாரமா தேவி, நிறு வனத்தின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

Loading...
Load next