சுடச் சுடச் செய்திகள்

பெருநடையில் 1,500 பேர்

உடற்குறையாளர்களுக்கான சங்கம் ஏற்பாட்டில் நேற்று 3கி.மீ. ஆற்றல் பெருநடை நிகழ்ச்சி நடந்தது. சைனிஸ் கார்டனில் 1,500க்கும் அதிக மக்கள் திரண்டனர். இந்தப் பெருநடை நிகழ்ச்சி இத்துடன் 2வது ஆண்டாக நடந்தது. உடற்குறையாளர்களும் மற்றவர்களும் கலந்துறவாடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் இந்தப் பெருநடை நடத்தப்படு கிறது. நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் $160,000 திரட்டப் பட்டது. இது இந்தச் சங்கத்தின் செயல்திட்டங்களுக்கும் சேவைகளுக்கும் பயன்படுத்தப் படும். பிரதமர் அலுவலக அமைச்சர் டெஸ்மண்ட் லீ பெருநடையை தொடங்கி வைத்து அதில் கலந்து கொண்டார். 200மீ. தூரத் திற்கு கண்ணைக் கட்டிக் கொண்டு அல்லது ஒரு காலை கட்டிக்கொண்டு நடக்கும் அங்கமும் இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon