கோவாவில் வென்ற பாஜக டெல்லியில் கோட்டைவிட்டது

புதுடெல்லி: மூன்று மாநிலங்களில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கோவாவின் இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்ற பாஜக மற்ற இடங்களில் கோட்டைவிட் டது. டெல்லி, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள பாவனா தொகுதியில் தொடக்கத்தில் காங் கிரஸ் வேட்பாளர் சுரேந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல ஆம் ஆத்மி வேட்பாளர் ராம்சந்திரா முன்னிலை பெற்றார்.

இறுதியாக ஆம் ஆத்மி வேட் பாளர் ராம்சந்திரா 24,052 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் மொத் தம் 59,886 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த நிலையில், பாஜக வேட்பாளர் பிரகாஷ் 35,834 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் 31,919 வாக்குகளும் பெற்றனர். அதேபோல், ஆந்திராவின் நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த புமா பிரம்மானந்தா 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் ஒஎஸ்ஆர் கட்சி வேட்பா ளரைத் தோற்கடித்தார். பனாஜி சட்டமன்றத் தொகுதி யில் தம்மை எதிர்த்துப் போட்டி யிட்ட காங். வேட்பாளர் கிரிஷ் சோடான்கரை, 4,803 வாக்குகள் வித்தியாசத்தில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தோற்கடித்து வெற்றி பெற்று உள்ளார். மனோகர் பாரிக்கருக்கு 9,862 வாக்குகளும் காங்கிரஸ் வேட் பாளருக்கு 5,059 வாக்குகளும் கிடைத்தன. வெற்றிக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய மனோகர் பாரிக்கர், "மக்கள் புத்திசாலித் தனமாக வாக்களித்துள்ளனர். 33 விழுக்காடு கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன்.

"சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து விரைவில் மாநிலங்களவை உறுப் பினர் பதவியில் இருந்து விலக உள்ளேன்," என்றார். கோவாவின் மற்றொரு தொகு தியான வல்போயிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பி னராக இருந்த இவர், பாரதிய ஜனதாவில் இணைந்து இடைத் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். பாரிக்கரின் வெற்றியை அடுத்து கோவாவில் பாஜகவின் ஆட்சி உறுதிச் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், சிறிய கட்சி களுடன் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா அங்கு ஆட்சியமைத்தது. இதனையடுத்து மத்திய பாது காப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார். பாரிக்கர் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், பனாஜி தொகுதி பாஜக எம்எல்ஏ, பாரிக்கருக்காக பதவி விலகினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!