ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினப் புகழாரம்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்று சிறுவர்களுடன் சேர்ந்து பாடல் பாடி ஆரம்பக் கல்வி ஆசிரி யர்களுக்குப் புகழாரம் சூட்டினார். திரு டானின் ஃபேஸ்புக் பக் கத்தில் நேற்றுக் காலை பதிவேற்றப் பட்ட ஒரு நிமிடக் காணொளியில், "யூ ஆர் மை சன்ஷைன்" பாட லைத் திரு டான் பாடியிருந்தார். "சில நாட்களுக்குமுன், தாம்சனில் இருக்கும் த லிட்டில் ஸ்கூல் ஹவுஸிலும் சில்டர்ன் ஹவுஸ் தாம்சனிலும் உள்ள எனது இளம் நண்பர்களைச் சந்தித்து இந்தக் காணொளியைத் தயாரித் தேன்," என்று அவர் எழுதியிருந் தார். "ஆரம்பக் கல்வி ஆசிரியர்க ளும் இன்றைய ஆசிரியர் தின விடுப்பை மகிழ்ச்சியாகக் கழிப்பார் கள் என நம்புகிறேன்," என்றார் அவர். ஆரம்பகாலப் பள்ளிகளிலும் குழந்தை பராமரிப்பு நிலையங்களி லும் பணிபுரியும் ஆசிரியர்கள் இவ்வாண்டுதான் முதல்முறையாக ஆசிரியர் தினத்தன்று விடுப்பு பெற்றனர். இள வயதினரைப் பேணி வளர்ப்பதில் ஆரம்பக் கல்வி ஆசி ரியர்கள் காட்டும் ஆர்வத்தையும் கடப்பாட்டையும் பாராட்டும் நோக்கத்துடன் சென்ற ஆண்டு அக் டோபர் மாதம் இந்த விடுப்பைத் திரு டான் அறிவித்தார். நேற்று கிட்டத்தட்ட எல்லா குழந்தை பராமரிப்பு நிலையங் களும் மூடப்பட்டிருந்தன. புதுப்பிப் புப் பணிகள் போன்ற சில கார ணங்களால் சில நிலையங்கள் மட்டும் மூடப்படவில்லை. சிங்கப்பூரில் சுமார் 1,300 குழந்தை பராமரிப்பு நிலையங்களும் 500 பாலர் பள்ளிகளும் உள்ளன.

பாலர் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் டான் சுவான் ஜின். படம்: ஃபேஸ்புக் காணொளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!