வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்

லண்டன்: ஹைட்ரஜன் அணு குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து வடகொரியா சோதனை மேற்கொண்டதற்கு அனைத்துலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுத கண் காணிப்பு அமைப்பு வெடிகுண்டு சோதனை குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. இந்தச் செய்கை மிகவும் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதில் சம்மந்தப் பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அது கோரிக்கை வைத்தது. "வடகொரியாவை திருப்திப் படுத்துவது முடியாத காரியம்," என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர், அந்நாடு தொடர்ந்து அமெரிக்கா வுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா மேற்கொண்ட இந்தச் சோதனையால் ஏற்பட்ட அதிர்வைக் கண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத் தில் சீன எல்லைப்பகுதியில் வசிக்கும் பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். ஓராண்டுக்கு முன்பு வட கொரியா வெடிகுண்டு ஒன்றை சோதனை செய்தபோது உணர்ந்த தைவிட, 10 மடங்கு அதிக அதிர்வை உணர்ந்ததாக தென் கொரியாவும் ஜப்பானும் தெரி வித்தன. ஐநா சபையின் பாதுகாப்பு மன்றம் விரைந்து செயல்பட்டு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ளார். தவறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் கோரிய சீனா, ஐநா சபையின் தீர்மானங்களை முழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக் கும் என்று எச்சரித்துள்ளது. அணுவாயுதச் சோதனை தடுப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக 'சிடிபிடி' எனும் அணுவாயுதச் சோதனை தடுப்பு அமைப்பு கருத்துரைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!