அடக்கி வாசிக்க ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் குறித்து அவ்வப்போது வெளி யாகும் தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இத்தகவலை இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமா ருக்மணி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' இந்நிறுவனத்தின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செலவு குறித்து கவலைப்படாமல் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வரு கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆளப்போறான் தமிழன்', 'நீதானே', 'மெர்சல் அரசன்' உள்ளிட்ட பாடல்களின் பாடல் வரிகள் காணொளி வடிவில் முன்பே வெளியாகி இருந்தன.

இதையடுத்து தற்போது 'மாச்சோ' பாடலின் வரிகள் அடங்கிய காணொளியும் வெளியிடப்பட் டுள்ளது. இது போதாதா? விஜய் ரசிகர்கள் இப்பாடல் வரிகளை ஒருவருக்கொருவர் சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையே 'மெர்சல்' படத்தின் முன்னோட்டக் காட்சி களை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோட்டத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனத் தெரி கிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இதற்கிடையே 'மெர்சல்' படம் தொடர்பாக எத்தகைய விமர்சனங் கள் வெளிவந்தாலும் அவற்றை எதிர்வினையாக்க வேண்டாம் என விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாகக் கேள்வி. குறிப்பாக இதர முன்னணி நடி கர்களின் ரசிகர்கள் என்ற போர் வையில் ஒருசிலர் வம்பு வளர்க்க லாம் என்பதால் வீண் மோதல் களைத் தவிர்க்கும் பொருட்டு இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

'மெர்சல்' படத்தில் இடம்பெறும் காட்சியில் விஜய்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!