சிங்கப்பூர்-இந்தோ. உறவைப் பறைசாற்றும் விமான அணிவகுப்பு

சிங்கப்பூர்-இந்தோனீசிய நல்லுற வின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக மற்றொரு நிகழ்ச்சி நேற்று மரினா பே சவுத் தில் நடந்தேறியது. பொன்விழாவைக் குறிக்கும் விதமாக சுமார் இருபது போர் விமானங்கள் நேற்று '50' என்ற எண் வடிவத்தில் வானில் பறந்து சென்றன. சிங்கப்பூர் விமானப் படையும் இந்தோனேசிய விமானப் படையும் இணைந்து அரங்கேற்றிய இந்த கண்கவர் காட்சியை இரு நாட்டுத் தலைவர்களும் மரினா பே சவுத்தின் படகுத்துறை மையத்தில் இருந்து கண்டுகளித்தனர். சிங்கப்பூர் விமானப்படை மற்றொரு விமானப் படையுடன் இனைந்து இதுவரை அரங்கேற்றிய பல சாகசங்களில் இதுவே ஆகப் பெரியதாகவும் மிகவும் கடினமான தாகவும் கருதப்படுகிறது. "இரு நாட்டு விமானப்படைக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந் துணர்வும் இணைந்து செயல் படக்கூடிய திறனும் இதிலிருந்து தெளிவாகிறது" என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

சிங்கப்பூர்-இந்தோனீசிய ஐம்பது ஆண்டு உறவைக் குறிக்கும் விதத்தில் இரு நாட்டு விமானப் படைகளின் போர் விமானங்கள் ஐம்பது என்ற எண்ணைக் குறிக்கும் வகையில் (வலது படம்) பறந்து சென்றன. இதனை பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீ சிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ரசித்தனர். உடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (இடம்), திரு லீயின் துணைவியார் ஹோ சிங் (இடமிருந்து 2வது) அதிபர் ஜோக்கோ விடோடோவின் துணைவியார் இரியானா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!