களைகட்டும் விற்பனைத் திருவிழா

சுதாஸகி ராமன்

சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 'சிங்கப்பூர் அனைத் துலக இந்தியக் கண்காட்சி'க்கு வருவோரை வரவேற்க முன்னணி பாலிவுட் நட்சத்திரமான ஷாருக் கானும் இந்திய கிரிக்கெட் சகாப் தமான சச்சின் டெண்டுல்கரும் காத்திருக்கின்றனர். தொலைவிலிருந்து பார்க்கும் போது இவ்விரு பிரபலங்களை நேரில் காண்பதுபோல் இருந்தா லும் அருகே சென்ற பின்னரே அவர்கள் மெழுகுச்சிலைகளாக நிற்பது தெரியும்.

செந்தோசா தீவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 'மேடம் டுஸாட்ஸ்' மெழுகுச்சிலை அரும் பொருளகத்தில் இருந்து முதன் முறையாக இந்தச் சிலைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன. தமிழ் முரசு நாளிதழ், தப்லா! வார இதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடை பெறும் இந்த விற்பனைத் திரு விழாவில் இவ்விரு பிரபலங்களின் மெழுகுச்சிலைகளுடன் வாடிக்கை யாளர்கள் இலவசமாகப் புகைப் படம் எடுத்து மகிழலாம். அ ரு ம் பொ ரு ள க த் தி லு ள் ள அன்பளிப்புப் பொருட்களை வாங் கவும் மலிவான கட்டணத்தில் அரும்பொருளகத்திற்குச் செல்ல சிறப்பு நுழைவுச்சீட்டுகளை வாங்க வும் இந்த விற்பனைத் திருவிழா வாய்ப்புத் தருகிறது. தீபாவளிக் கொண்டாட்டங் களுக்குத் தேவையான புத்தா டைகள், அவற்றுக்கு அழகூட்டும் ஆபரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அறைகலன்கள், உறவினர்களுடன் சேர்ந்து உண்ண பலகாரங்கள் என்று திரு விழாவில் வழக்கமாக விற்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் அள்ளிச் செல்கின்றனர்.

சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தின் 401, 402, 403 ஆகிய அரங்குகளில், 6,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது 'சிங்கப்பூர் அனைத்துலக இந்திய கண்காட்சி' எனும் விற்பனைத் திருவிழா. வண்ண வண்ண, புது வடிவமைப்புகளுடன் கூடிய ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அறைகலன்கள் என 200க்கு மேற்பட்ட கடைகளில் 10,000க்கும் அதிகமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரபல 'மேடம் டுஸாட்ஸ்' மெழுகுச்சிலை அரும்பொருளகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் மெழுகுச்சிலைகளுடன் வாடிக்கையாளர்கள் இலவசமாக புகைப்படம் எடுத்து மகிழவும் வாய்ப்புத் தருகிறது இவ்வாண்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த விற்பனைத் திருவிழா. படங்கள்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!