சிங்கை மக்களை மயக்கிய பிரித்திக்கா

சுதாஸகி ராமன்

மண் வாசம் நிறைந்த பாடல்களை இயல்பாக பாடும் 13 வயது சிறுமி பிரித்திக்கா (படம்), உணர்வுபூர்வ மாக விரும்பிப் பாடு வது மேற்கத்திய பாணியில் அமைந்த 'செந்தூரா' திரைப் பாடலை. விஜய் தொலைக் காட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2017ல் கிரா மத்துப் பாடல்களால் அனை வரையும் வசப்படுத் திய பிரித்திக்கா ரமேஷ், முதன்முறையாக நேற்று சிங்கப்பூர் வந்திருந்தார். இதுதான் அவர் மேற் கொண்டுள்ள முதல் வெளி நாட்டுப் பயணம். கள்ளம் கபடமற்ற தோற்றத்தில் எதார்த்த மாக கேள்விகளுக் குப் பதில் சொன்ன பிரித்திக்கா, சன் டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய விற் பனைத் திருவிழாவிற்கு வருகை புரிந்து அங்கு வந்திருந்த வர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

விற்பனைத் திருவிழாவிற்குத் தந்தை திரு ரமே‌ஷுடன் வந் திருந்த பிரித்திக்கா, ரசிகர் களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பாடல்களைப் பாடியும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தும் மகிழ்வித்தார். எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அவர், பாட்டுத் திறன் போட்டியை வென்று விஜய் தொலைக்காட்சி வழங்கிய 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள இல்லத் திற்கு ஒரே இரவில் சொந்தக் காரரானார். போட்டியின் நீதிபதிகள் அனைவரும் பிரித்திக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ள போதிலும் மால்குடி சுபா அளித்த ஆதரவு தனித்துவம் வாய்ந்தது எனக் கூறினார் பிரித்திக்கா. "தொண்டையையும் உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்துவதுடன் போட்டி யின் இடையே மேடையில் அர வணைத்துக்கொள்ளுதல், அவ் வப்போது தட்டிக்கொடுத்தல் என மால்குடி சுபா பொழிந்த அன்பு ஊக்கமளித்தது," என்று புன்னகை ததும்பக் கூறினார் அவர்.

மேடையில் கலக்கிய வித்யா பாலன் ஒவ்வொரு முறை சிங்கப்பூர் வரும்போதும் இங்குள்ள தூய்மை பிரபல பாலிவுட் நட்சத்திரமான விதியா பாலனை வியப்பில் ஆழ்த்த தவறுவதில்லை. இம் முறையும் அப்படித்தான் என்று கூறி, தமது கலகலப்பான பேச் சாலும் புன்முறுவல் சிந்தும் முகத்தாலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டார் 'கஹானி' திரைப்படப் புகழ் வித்யா பாலன். சிங்கப்பூர் அனைத்துலக விற்பனைத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார். தமிழ், இந்தி, ஆங்கிலம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி எனப் பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், 'பூல் புலயா', 'தி டர்ட்டி பிக்ச்சர்', 'பேகம் ஜான்' ஆகிய இந்திப் படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

குறிப்பாக மறைந்த பிரபல தமிழ்த் திரப்பட நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற் றைச் சித்திரிக்கும் 'தி டர்ட்டி பிக்சர்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக, சில்க் ஸ்மிதா வின் வேடத்தில் இவர் நடித்து தென்னிந்திய ரசிகர்களை மட்டு மின்றி ஒட்டுமொத்த இந்தியர் களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த வேடத்திற்காக தேசிய விருது உட்பட பல திரைப்பட விருதுகளையும் வித்யா பாலன் பெற்றார். இந்தியாவின் பத்மஸ்ரீ விருதை கடந்த 2014ஆம் ஆண்டு பெற்ற வித்யா பாலனைக் காண சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கெல்லாம் பொதுமக்கள் வெள்ளமென திரண்டனர். பல மொழிகளில் தங்கள் வாழ்த்துகளைக் கூறி கூச்சலிட் டும் பலத்த கரவொலி எழுப்பியும் மேடைக்கு வந்த வித்யா பாலனை வரவேற்ற அவர்கள், வித்யா பாலனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் முயன்றனர். விற்பனைத் திருவிழாவுக்கு சிறப்பு வருகை புரிந்த பிரபல இந்தி திரையுலக நட்சத்திரமான வித்யா பாலன் மேடையில் இதர கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி, திரளான ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொள்கிறார். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!