‘இர்மா’ புயலால் கியூபாவில் நிலச்சரிவு

ஹவானா: கரீபியத் தீவுகளை துவம்சம் செய்த 'இர்மா' புயல் கியூபாவில் மிகப்பெரிய நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. 21 பேர் இறந்துபோனதால் ஃபுளோரிடாவில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. கியூபாவின் கேமகுவே தீவுக் கூட்டத்தில் கரையைக் கடந்த 'இர்மா' புயல்காற்று மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் வீசியது. இதனால் அந்த மாநிலத்தில் வசிக்கும் 5.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளனர். ஐந்தாம் நிலைப் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ள இது, மிக ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவை ஐந்தாம் நிலைப் புயல் தாக்கியுள்ளது. முன்னதாக, தென்கிழக்கு மயாமியை 'இர்மா' மணிக்கு 485 கி.மீ. வேகத்தில் தாக்கியது.

பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சில தொலைதூர நகரங்களில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது என கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்த டால்ஃபின் கள்கூட பாதுகாப்பான பகுதிக ளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ஏற்கெனவே, கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95% கட்டடங்கள் இந்தப் புயலால் சேதமடைந்துள்ளன. அந்தத் தீவில் குடியிருக்க முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தீவை மறுசீரமைக்க 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என ஆன்டிகுவா- பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரௌனி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!