புதுப்புது அனுபவங்கள், திருப்தியான வாழ்க்கை

மாதங்கி இளங்கோவன்

அர்ஜெண்டினா காற்பந்துக் குழு வினர் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அவர்களுக்கு முடிதிருத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றனர் 'தி கோல்டன் ரூல் பார்பர் கோ' முடிதிருத்தும் நிறுவன ஊழியர்கள். அங்கு பணிபுரியும் ஒரே இந்தியரான சிவகுரு ராஜாகண்ணு இதுபோன்ற சுவையான அனுபவங் களை இந்தப் பணி மூலம் தாம் பெறுவதாகக் கூறினார். கல்வியில் அதிக நாட்டம் இல்லாதிருந்ததால் படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேட எண்ணினார் சிவகுரு, 24. அந்தச் சமயத்தில், தாம் எப்போதும் முடிதிருத்தம் செய்து கொள்ளும் 'தி கோல்டன் ரூல் பார்பர் கோ'வுக்கு முடிதிருத்தச் சென்ற சிவகுரு, அந்தக் கடையின் முதலாளியிடம் முடிதிருத்தும் சேவை பெற்றுக்கொண்டே பேச்சுக் கொடுத்தார்.

தாம் வேலை தேடுவது பற்றி அவரிடம் சிவகுரு குறிப்பிட்டதும் தன்னுடைய நிறுவனத்திலேயே பணிபுரிய சிவகுருவுக்கு விளை யாட்டாக அழைப்பு விடுத்தார் அந்நிறுவன உரிமையாளர். முடிதிருத்தம், முடியலங்காரம் பற்றி அவ்வளவாகத் தெரியாத போதும் முயற்சி செய்து பார்க்க லாம் என்ற எண்ணத்தில் அந்தப் பணியில் சேர்ந்தார் சிவகுரு. அவருடன் மேலும் 18 இளையர் கள் அங்கு ஆடவருக்கு முடிதிருத் தும் பணிபுரிகின்றனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர், சக ஊழியர்கள் ஆகியோர் சிவகுரு வுக்கு வழிகாட்டிகளாக இருந்து தொழில் கற்பித்தனர்.

சிங்கப்பூருக்கு அண்மையில் வந்திருந்த அர்ஜெண்டினா காற்பந்துக் குழுவினருக்கு முடிதிருத்தும் வாய்ப்புப் பெற்றதோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு பெற்றனர் சிவகுரு (முன்வரிசையில் அமர்ந்திருப்போரில் இடமிருந்து இரண்டாவது) உள்ளிட்ட 'தி கோல்டன் ரூல் பார்பர் கோ' நிறுவனத்தின் ஊழியர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!