அஷ்வின், ஜடேஜாவுக்கு இடமில்லை

புதுடெல்லி: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி திரும்பி உள்ளனர். கடந்த வாரம் இலங்கை அணியை ஒயிட்=வாஷ் செய்த இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஆர். அஸ்வின் மற்றும் ரவிந்தர் ஜடேஜா இதில் இடம் பெறவில்லை. ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டார். பேட்டிங்கில் அனுபவத்துக்கு முதன்மை அளிக்கப்பட்டு புதிய வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அருமையாக ஆடியதால் குல்தீப், யஜுவேந்திர சாஹல், அக்சர் படேல் ஆகி யோருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம்தான் முக்கிய காரணம் என்றும் அணித் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார். ‚சுழற்சி முறைக் கொள்கை அடிப்படையில் அணித் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் பிரசாத். அணியில் இடம் பெற்றவர்கள் விவரம்: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ‌ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரஹானே, டோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!