யுனைடெட் வெற்றியைத் தடுத்து நிறுத்திய ஸ்டோக்

ஸ்டோக் சிட்டி: சர் அலெக்ஸ் ஃபெர்குசன் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை நிர்வகிக்கும் பணியிலிருந்து ஓய்வுபெற்றதி லிருந்து அந்த அணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் ஸ்டோக் சிட்டி குழுவை வென்றதில்லை. இந்த அவல நிலை நேற்று அதிகாலை நடைபெற்ற போட்டி யிலும் தொடர்ந்தது. நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்னரேகூட ஸ்டோக் சிட்டி நிர்வாகியும் முன்னாள் யுனைடெட் வீரருமான மார்க் ஹியூஸ் யுனைடெட் அணியின் தற்காப்பு அரணில் தெரியும் பலவீனத்தைத் தான் பயன்படுத்திக்கொள்ளப் போவ தாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார். அவர் கூறியது போலவே யுனைடெட் தற்காப்பு வீரர்களான எரிக் பெயி, ஃபில் ஜோன்ஸ் இடையே தெரிந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஸ்டோக் சிட்டி வீரரான சொப்பு மோட்டிங் இரு கோல்கள் போட்டு யுனைடெட்டின் வெற்றியைத் தடுத்து நிறுத்தினார்.

முன்னதாக சொப்பு மோட்டிங் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் போட்ட கோலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் யுனைடெட் அடுத்த மூன்று நிமிடங்களில் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் மூலமாக தனது முதல் கோலை போட்டது. பின்னர் இரண்டாம் பாதியில், ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ரொமேலு லுக்காக்கு மூலம் இரண்டாவது கோலை போட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அது நீண்டநேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஆறாவது நிமிடத்திலேயே யுனைடெட்டின் தற்காப்பு விளையாட்டில் சோடை போக சொப்பு மோட்டிங் இரண்டவது கோல் போட்டு யுனைடெட்டால் ஸ்டோக் சிட்டியை வெல்ல முடியாது என்ற நிலையை உறுதி செய்தது.

நேற்றைய போட்டியில் யுனைடெட் குழுவுக்கு எதிராக இரண்டாவது கோலை போடும் சொப்பு மோட்டிங். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!