பெண்கள் மடத்திற்கு சுரங்கவழி

சிர்சா: பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹிமின் தேரா சச்சா சௌதா மடத்தில் கடந்த 8ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது. அப்போது குர்மீத்தின் அறை யில் இருந்து பெண் துறவிகள் இருப்பிடத்திற்குச் செல்ல ரகசிய சுரங்கப் பாதை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 700 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த ஆசிரமத் தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பவார் முன்னிலையில் நடந்த இச்சோதனையில் சட்டவிரோத வெடிமருந்து தொழிற்சாலை, பதிவு செய்யப்படாத கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

இந்தச் சோதனை ஞாயிற்றுக் கிழமை முடிவுக்கு வந்தது. அப் போது, மடத்தில் இரண்டு சுரங்கப் பாதைகள் இருந்தது கண்டு பிடிக் கப்பட்டது. ஒன்று குர்மீத்தின் அறையில் இருந்து பெண் துறவிகள் விடுதி வரை செல்லும் சுரங்கப் பாதை எனத் தெரிய வந்தது. ஆனால், அந்தச் சுரங்கம் மண் போட்டு அவசரமாக மூடப்பட்டு உள்ளது என்று தகவல், மக்கள் தொடர்பு துறை துணை இயக்குநர் சதீஷ் மெஹ்ரா கூறினார். மற்றொன்று சாமியாரின் அறை யில் இருந்து வெடிமருந்து தொழிற் சாலைக்குச் செல்லும் பாதையாக இருந்தது என அவர் சொன்னார். இதற்கிடையில் சாமியாரைத் தப்பிக்க வைக்க முயன்றது, குற்ற வாளி என்று அறிவிக்கப்பட்ட வுடன் வன்முறையைத் தூண்டியது உட்படப் பல்வேறு குற்றச்சாட்டு களின் கீழ் சம்கௌர் சிங், கரம்ஜீத் சிங், டான் சிங் என குர்மீத்தின் உதவியாளர்கள் மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!