ஹலிமாவுக்கு மட்டுமே தகுதிச் சான்றிதழ்

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான தகுதிச் சான்றி தழை முன்னாள் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் மட் டுமே பெற்றுள்ளார். கடற்துறை சேவை நிறுவனத் தலைவர் ஃபாரிட் கான், 61, சொத்து நிறுவன தலைமை நிர்வாகி சாலே மரிக்கான், 67, ஆகிய இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி பெற வில்லை என்று அதிபர் தேர்தல் குழு தெரிவித்து உள்ளது. 63 வயதான திருவாட்டி ஹலிமா மட்டுமே தகுதி பெற் றிருப்பதால் நாட்டின் எட்டாவது அதிபராக நாளை வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிந்த பின்னர் முறைப்படி அவர் அறிவிக்கப்படு வார். வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு இரு நாட்கள் முன்னதாக தகுதிச் சான்றிதழ் முடிவை குழு அறிவித்துள்ளது.

திரு சாலே, திரு ஃபாரிட் ஆகிய இருவரும் $500 மில் லியன் பங்குத் தொகையாகப் பெற்று இருக்கும் நிறுவனம் ஒன்றை கடந்த மூன்றாண்டு களாகச் சார்ந்திருக்கவில்லை என் பதால் அவ்விருவரும் தகுதியான வர்கள் என்று அதிபர் தேர்தல் குழு வால் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட்ட அர சமைப்புச் சட்டத்திருத்தத்தில் நிறு வனப் பங்குத் தொகையின் அளவு ஒரு நிபந்தனையாகச் சேர்க்கப் பட்டது. தகுதிச் சான்றிதழ் கோருவதற் கான விண்ணப்பங்களைப் பெறு வது கடந்த 4ஆம் தேதியுடன் முடி வடைந்துவிட்டது. எனவே அதிபர் தேர்தலில் போட்டியிட திருவாட்டி ஹலிமா ஒருவரே தகுதியானவர் ஆகிறார். இந்த முறை அதிபர் தேர்தல் வேட்பாளர்களாகப் போட்டியிடு வோர் தகுதிச் சான்றிதழோடு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழையும் பெறவேண் டும். அந்த சமூகச் சான்றிதழ், மனுச் செய்த மூவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.

திருவாட்டி ஹலிமா யாக்கோப், 63. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!