2-0 கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் வெற்றி

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்றுவந்த வெஸ்ட் ஹேம் குழு தனது முதல் வெற்றியை நேற்று முன்தினம் சுவைத்தது. ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவுடன் மோதிய ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அது வெற்றி பெற்றது. தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் வெஸ்ட் ஹேம் குழுவின் நிர்வாகி ஸ்லாவன் பிலிச், இந்த வெற்றி தனக்கு கிடைத்த மாபெரும் பிறந்தநாள் பரிசு என்று கூறினார். பெட்ரோ ஒபியாங் 72வது நிமிடத்தில் வலையை நோக்கி அடித்த பந்து, தற்காப்பு ஆட்டக் காரர் மீது பட்டு வலைக்குள் புகுந் தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்ட்ரே அயூ ஒரு கோலை புகுத்தி ஹடர்ஸ்ஃபீல்டின் முதல் தோல்வியை உறுதி செய்தனர்.

இதற்கு முன் எதிர் அணியின் மண்ணில் விளையாடி, இந்த இபிஎல் ஆட்டத்தின் மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே வெஸ்ட் ஹேம் தழுவியது. ஆகஸ்ட் மாதம் உலக தடகள போட்டிகளுக்காக வெஸ்ட் ஹேமின் புதிய அரங்கம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், மற்ற அரங்கங்களுக்குச் சென்றே அந்தக் குழு விளையாடியது. சொந்த மண்ணில் விளையாடி இந்த முறை பட்டியலின் கடைசி யிலிருந்து 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், இரண்டாம் லீக் ஆட்டத்திற்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள் ளது, வெஸ்ட் ஹேம் குழு. இது வரை ஆடிய நான்கு போட்டிகளில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழு ஏழு புள்ளி கள் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!