நஜிப்: அமெரிக்காவின் உறுதியான பங்காளி நாடு மலேசியா

கோலாலம்பூர்: மலேசியா அதன் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களில் குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் உறுதியான பங்காளி நாடாக மலேசியா உள்ளது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அமெரிக்காவுக்கு உறுதி அளித்துள்ளார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள திரு நஜிப், முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த பங்காளித்துவ நாடு மலேசியா என்பதை எடுத்துரைத் தார். உலகில் அணுவாயுத மற்றும் பயங்கரவாத மிரட்டல் களும் பயங்கரவாத நடவடிக்கைகளும் அதிகரித்திருப்பதாகக் கூறிய திரு நஜிப், உறுதியான பங்காளித்துவ நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் எல்லா நாடு களுக்கும் தேவை என்பதை வலியுறுத்தினார்.

வா‌ஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் அரசியல் இணையப்பக்கத்தில் வெளிவந்த கட்டுரையில் திரு நஜிப் கூறிய இந்தக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் 60 ஆண்டுகளாக வலுவான இரு தரப்பு உறவு நீடிக்கும் நிலையில் திரு நஜிப் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்திக்கிறார்.

முக்கியமாக பாதுகாப்பு விவ காரம், வடகொரியாவின் சின மூட்டும் செயல்கள் குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மலேசிய 1எம்டிபி நிறுவன ஊழல் விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டுள்ள விசாரணை குறித்து அவர்கள் பேச்சு நடத்த மாட்டார்கள் என்று தெரிகிறது. வா‌ஷிங்டனிலுள்ள மலேசியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு நஜிப், அமெரிக்காவுக்கு மலேசியா முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதை எடுத் துரைப்பது தமது இப்பயணத்தின் நோக்கம் என்று கூறினார்.

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!