மேஃபிளவர் பள்ளிக்கூடத்தில் காதுகேளா மாணவர் பயில்வர்

மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் அடுத்த ஆண்டு முதல் காது கேளாத குறைபாடுள்ள பிள்ளைகள் வழக்கமான மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கல்வி பயில்வார்கள். அங் மோ கியோவில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூடம் அடுத்த ஆண்டு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் காதுகேளாத குறைபாடு உள்ளோரில் ஏழு மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ளும். மிதமானது முதல் அறவே காது கேட்காத மாணவர்களைச் சேர்த் துக்கொள்ளும் வகையில் வகைப் படுத்தப்பட்டுள்ள முதலாவது தொடக்கப்பள்ளி இதுவே ஆகும். இத்தகைய குறைபாடுள்ள பிள்ளைகள் இப்போது சிறப்பு கல்வி பள்ளிக்கூடங்களான லைட் ஹவுஸ் அல்லது கனோசியன் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

அனைத்துலக காது கேளாதோர் வாரம் நிகழ்ச்சியை கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப் போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். மத்தியில் அமைந்திருப்பதாலும் சைகை மொழியைப் பயன்படுத்தி காதுகேளாத பிள்ளைகளுக்குப் போதிக்கும் தோ பாயோ பீட்டி உயர்நிலைப்பள்ளி அருகே இருப்ப தாலும் மேஃபிளவர் தொடக்கப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கப் பேராளர்களுடன் அதிபர் ஹலிமா யாக்கோப், கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!