தமிழ்த் திறன் வளர்த்த போட்டிகள், பட்டிமன்றம்

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ்த் திறனை வளர்க்கும் நோக்கில் சிறுகதை, கட்டுரை எழுதும் போட்டியை நடத்தியது ஃபிரண்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு. அதில் பங்கேற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கும் விழா சென்ற ஜூலை மாதம் 29ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 'வாழ்வின் வெற்றிக்குத் தேவை முதுமையின் அனுபவமே! இளமையின் துடிப்பே!' என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்தப்பட்டது. முனைவர் இரத்தின வெங்கடேசன், திரு கண்ணன் சேஷாத்திரி, திரு சேவகன் ஆகியோர் வாழ்வின் வெற்றிக்குத் தேவை முதுமையின் அனுபவமே என்ற அணியிலும் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், முனைவர் மன்னை இராசகோபால், திரு இராம்குமார் சந்தானம் ஆகியோர் வாழ்வின் வெற்றிக்குத் தேவை இளமையின் துடிப்பே என்ற அணியிலும் இருந்து தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டார்கள். தமிழகத்தின் பட்டிமன்றப் பேச்சாளரான திரு மணிகண்டன் இந்த விவாதத் தின் நடுவராக இருந்தார். போட்டிகளில் பங்கேற்றதோடு பட்டிமன்றத்தையும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் மாணவர்கள். இந்தப் போட்டிகளில் பங்கேற் பதற்காக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொண்டதோடு பல் வேறு இணையத்தளங்களிலும் கருத்துகளைத் திரட்டியதாக மாணவர்கள் தெரிவித்தனர். சிறுகதைப் போட்டிக்காக 'ஆறாத வடு' எனும் தலைப்பில் பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர் லக்ஷ்மணன் நீரஜ் எழுதிய சிறுகதை இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சிறுகதைப் பிரிவில் இரண்டாம் பரிசு வென்ற லக்‌ஷ்மணன் நீரஜுக்கு சிறப்புப் பேச்சாளர் மணிகண்டன் பரிசை வழங்கினார். அவர்களுடன் ஃபிரண்டியர் இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் ஸ்ரீராமன் (வலது).

படம்: ஃபிரண்டியர் இந்தியர் நற்பணி செயற்குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!