தொடர் கனமழையால் தவிக்கும் கேரள மக்கள்

திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாக தொடந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதி களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாக அதிக அளவிலான மழை பெய்துவருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குப் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகள் நிறைந்த மாவட்டங்களான அட்டப்பாடி, பாலக்காடு, திருவனந்தபுரம், கண்ணனூர், ஆலப்புழை, இடுக்கி முதலிய பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கேரளாவில் உள்ள ஐந்து முக்கிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

நெய்யாறு, காருகுட்டி, மலன்கரா போன்ற முக்கிய நதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கேரளாவில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாலக்காட்டைச் சேர்ந்த எட்டு வயது குழந்தை நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்து வரும் கனமழையால் கேரளாவின் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ஃபேஸ்புக் மூலம் கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயன் அறிவித்துள்ளார். விடுமுறை காரணமாக பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக் கப்பட்டுள்ளன.

மலைப்பகுதிகளையொட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மீட்புக் குழுவினரின் உதவியோடு மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கோட்டயம் - திருவனந்தபுரம் - தி ரு வ ன ந் த பு ர ம் இடையிலான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவ தால் சரக்கு லாரி போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்க ளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!