‘5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவுக்கு வரலாம்’

சிட்னி: வருங்கால ஒருநாள் கிரிக் கெட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுவது கடினம் என்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் சதர் லேண்டு. ஐசிசி எனப்படும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் பல மாற்றங் களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் அனைத்துலக கிரிக் கெட் ஆடத் தகுதி பெற்ற 13 அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் லீக் நடத்துவதும் ஒன் றாகும். இந்த லீக் தொடரை நடத்துவதற்கு ஐசிசி தீவிரம் காட்டி வருகிறது. இதுபற்றி பேசிய சதர்லேண்டு, "வருங்காலத்தில் இரு நாடுக ளுக்கு இடையிலான ஐந்து போட் டிகள் கொண்ட ஒருநாள் கிரிக் கெட் தொடர் நடைபெறுவது கடி னம். "ஏனெனில் ஒருநாள் கிரிக் கெட் லீக் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு அணியும் மற்ற அணி களுடன் தலா ஒரு முறை சொந்த மண்ணிலும் ஒருமுறை வெளி நாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும். "எனவே, வருங்காலத்தில் எந்த நாடும் மூன்று போட்டி களுக்கு மேல் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் என்று எனக்குத் தோன்றவில்லை. இத னால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!