ஜம்பா: பாண்டியாவை சீக்கிரம் வீழ்த்துவேன்

கோல்கத்தா: இந்தியாவுக்கு எதி ரான இன்றைய கிரிக்கெட் போட்டி யில் ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவேன் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா. முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பந்தடித்த இந்திய அணி 87 ஒட்டத்திற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத் தாலும் 'ஆல்=ரவுண்டர்' ஹார்திக் பாண்டியா 83 ஓட்டங்களும் டோனி 79 ஓட்டங்களும் எடுத்து, இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டு 281 ஓட்டங்கள் குவித்தனர். இதில், ஆஸ்திரேலிய அணி யின் சுழற்பந்து வீச்சாளரான 25 வயதான ஆடம் ஜம்பா 66 ஓட்டங்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அவரது ஒரே ஓவரில் பாண்டியா, பவுண்டரியுடன் 'ஹாட் ரிக்' சிக்சரும் பறக்க விட்டு மிரட்டினார்.

இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையி லான 2வது ஒரு நாள் போட்டி பற்றி பேசிய ஆடம் ஜம்பா, "நெருக்க டிக்கு மத்தியில் பந்து வீசுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். "ஆனால் பாண்டி யாவுக்கு எதிராக, எனது வியூகத்தைத் துல்லியமாக செயல் படுத்த தவறிவிட்டேன். "அவரை அடிக்க விடாமல் தடுப்பது முக் கியமானதாக இருந் தது. அந்த மூன்று பந்துகளை எளிதில் விளாசும் வகையில் வீசிவிட்டேன். "பாண்டியா சிறந்த வீரர். அவரைப் போன்ற வீரர்களுக்குக் கச்சிதமாக பந்து வீசாவிட்டால், அதன் பிறகு பந்து எல்லைக் கோட்டை தாண்டி தான் போய் கொண்டு இருக்கும். "மைதானத்தின் அளவைப் பொறுத்து சரியான உயரத்தில் பந்து வீச வேண்டியது இங்கு முக்கியமாகும். "எனது பந்து வீச்சில் 20=30 ஓட்டங்கள் குறைவாக விட்டுக் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். "டோனி- பாண்டியா பங்காளித் துவத்தை உடைக்கும் வகையில், எங்களது பந்துவீச்சுச் சிறப்பாக இல்லை என்றார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!