டோர்ட்மண்ட் மண்ணில் ரியால் மட்ரிட் வெற்றி

டோர்ட்மண்ட்: நீண்ட நாட்க ளுக்குப் பிறகு டோர்ட்மண்ட் மண்ணில் வெற்றி பெற்றுள்ளது ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு. டோர்ட்மண்ட் மண்ணில் கடைசியாக விளையாடிய ஆட் டங்களில் மூன்று தோல்வி, மூன்று சமநிலை பெற்றிருந்த ரியால் மட்ரிட் நேற்று அதிகாலை நடந்தப் போட்டியில் ஒருவழியாக வெற்றி பெற்றுவிட்டது. சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் ஆட்டமொன்றில் பொருசியா டோர்ட்மண்ட் காற் பந்துக் குழுவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட ரியால் மட்ரிட் 3=1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. 18வது நிமிடத்தில் முதல் கோலைப் கேரத் பேல் புகுத்தினார். நட்சத்திர வீரர் ரொனால்டோ 49, 79வது நிமிடங்களில் தலா ஒரு கோலைப் போட்டார்.

இதற்கிடையே, 54வது நிமிடத் தில் அபுமயாங் டோர்ட் மண்ட் குழுவிற்கான ஒரேயொரு கோலை புகுத்தினார். எனவே 1=3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி யது டோர்ட்மண்ட். சாம்பியன்ஸ் லீக்கின் தொட ரின் தற்போதைய பருவத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்து உள்ள டோர்ட்மண்ட் குழு 'எச்' பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் ஹேரி கேன் மூன்று கோல்களைப் புகுத்த டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர், எபோல் நிகோ ‌ஷியா குழுவை வெற்றி கொண் டது. ஷாக்ட் டோன்ஸ்க் குழுவிற்கு எதிரான இன்னோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி போராடி வென்றது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது சிட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!