சீறும் சிகரம்: ஆயத்த நிலையில் விமான நிலையங்கள்

ஜகார்த்தா: பாலி எரிமலை குமுறு கிறது. எந்த நேரத்திலும் அது தனது சீற்றத்தை வெளிப்படுத்தி தீப்பிழம்புகளை கக்கும் என்பதால் விமானச் சேவைகள் பாதிக்கப்படக் கூடும். இதனால் பத்து விமான நிலை யங்களை இந்தோனீசிய அரசு ஆயத்த நிலையில் வைத்துள்ளது. இதன் தொடர்பில் பேசிய அமைச்சின் பேச்சாளர் ஒருவர், பத்து விமான நிலையங்களும் ஜகார்த்தாவில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார். அம்போன், பாலிக்பாபான், பன்யூவாங்கி, கூப்பாங், மகாஸார், மனாடோ, சோலோ, சுரபாயா ஆகி யவை அந்த பத்து விமான நிலை யங்களாகும். பத்து விமான நிலையங்களும் பாலி விமான நிலையத்துக்கு மாற்றாக செயல்படும் என்றும் அவர் சொன்னார். அகுங் எரிமலையிலிருந்து தீப் பிழம்புகளும் கரும்புகையும் வெளி யேறி சுற்றுவட்டாரம் பாதிக்கப் பட்டால் விமான நிலையத்தை மூட நேரிடும் என்று பாலியில் நடை பெற்ற 4வது ஆசிய-ஐரோப்பிய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந் தோனீசிய போக்குவரத்து அமைச் சர் புடி கார்யா சுமாடி தெரிவித்தார்.

பாலியில் உருமிக்கொண்டிருக்கும் அகுங் எரிமலையின் அடிவாரத்தில் உள்ள குபு என்ற கிராமத்தைச் சேர்ந்த இருவர் வீடு திரும்புகின்றனர். சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான பாலியில் உள்ள எரிமலை எந்த நேரத்திலும் தீப்பிழம்புகளைக் கக்கும் என்பதால் விமானச்சேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளை இந்தோனீசிய அதிகாரிகள் செய்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!