எழுத்தாளர் விழாவில் முத்தமிழ் வில்லுப்பாட்டு

'தந்தனத்தோம் என்று சொல்லியே' வில்லினில் பாட சிங்கப்பூர் வருகிறார் பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் டாக்டர் திருமதி பாரதி திருமகன். கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் திருநெல் வேலியில் தோன்றிய இக்கலை, ஆயுத மாகப் பயன்படுத்தப்படும் வில்லை இசைக்கருவியாக மாற்றி, தாள நயத் துடனும் பாடல், வசனம் போன்ற வற்றால் நகைச்சுவையுடனும் கலந்து கவர்ச்சியாகக் கதை சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் முரசின் பிரம்மாண்ட படைப் பாக 'நாட்டுப்புறக் கலை வளர்க்கும் கதை மரபு' என்ற நிகழ்ச்சி நவம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு விக் டோரியா அரங்கில் நடைபெற உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரிய வில்லுப்பாட்டுக் கலைஞரான டாக்டர் பாரதி திருமகனின் வில்லுப்பாட்டு, அவாண்ட் தியேட்டர் நாடகக் குழுவின் 'வீதி நாடகம்', பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் 'தெருக்கூத்து' ஆகிய அங்கங்கள் தமிழ்ப் பாரம்பரிய கதை சொல்லும் முறையில் சிங்கப்பூர் படைப்பு கள் இந்நிகழ்வில் வழங்கப்படும்.

தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் 'கலைச்சுடர்மணி', 'வில்லிசை வித்தகி' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள டாக்டர் பாரதி திருமகன், தமது மகன் தி.கலைமகன், கணவர் ஆகியோருடன் நிகழ்ச்சி படைக்கிறார். படம்: திருமதி பாரதி திருமகன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!