You are here

நம்பிக்கை குறைந்தால்

நம்பிக்கைதான் மனிதவாழ்வின் வெற்றியையும் நிம்மதி யையும் வளர்க்கும் என்பார்கள். அதுவே அவநம்பிக்கை யாகிவிட்டால், நினைக்கக்கூடாதவற்றை எல்லாம்கூட மனித மனம் நினைக்கத் தொடங்கும். ஆயுட்காலத்தில் மனிதமனங்கள் மகிழ்வோடு இருக்கும்போது மகிழ்ச்சிமிக்க செயல்களில் ஈடுபடு வதையும் மகிழ்ச்சியின்றி, நம்பிக்கையின்றி இருக்கும் போது தகாத செயல்களில் ஈடுபடுவதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆப்ரிக்க இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள வட்டாரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெள்ளை இன காவல்காரர்களுக்குக் அவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை.

கறுப்பின அமெரிக்கர்களுக்கோ வெள்ளையின காவல்காரர்களையும் அவர்களின் நடத் தையும் பிடிப்பதில்லை. ஆனால் அதேவேளையில் சமூ கம் சீராக நடைபெறும்போது தங்களைச் சுற்றி வாழ்வோர் தங்கள்மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். இருப்பினும் அங்கு சில பகுதிகளில் மிகப் பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடந்து, அதன் காரணமாகப் பலர் மரணமடைய நேரும்போது மக்களிடையே இந்த நம்பிக்கை தளர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட அசம்பா விதங்கள் நடைபெற்ற அடுத்த சில நாட்களில் அக்கம் பக்கத்தாரிடையே ஒருவித அச்சம் படர்வதை உணர முடிகிறது.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள், பொதுப் போக்குவரவைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்கிறோம், கலைக்கதம்ப நிகழ்ச்சிகளுக்கும் கூட்டமாகச் செல் கிறோம், வழிபாட்டு இடங்களுக்கும் வழக்கம்போல செல்கிறோம். ஆனால் அச்சம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வகைச் சூழ்நிலைகளில் சிலருக்கு குறிப்பிட்ட சில காலங்களுக்காவது பொது இடங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்ததாகப்படுகிறது. வேறு சில ருக்கோ, தற்காப்புக்காகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம் எனப்படுகிறது.

பொதுவாக, ஓர் அரசாங்கத்தின் மீதோ, அரசியல் தலைமைத்துவத்தின் மீதோ, மக்களிடையே ஒருவருக்கு ஒருவர் நிலவும் தோழமை உறவு அல்லது நேர்மையான செயல்பாடுகள் குறையும்போது மனிதநேயமும் நம்பிக் கையும் தளர்கின்றன.

அந்த சமயங்களில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், அவமரியாதைகள், ஏமாற்றங்கள் போன்றவை ஒருவரை சினமூட்டி அவருக்குள்ளே வன்முறை உணர்வைத் தூண்டிவிடுவதாக ஒஹாயோ பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ரேன்டோல்ஃப் ரோத் கூறுகிறார். இப்படித் தான் ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவன் தன்னால் போலிஸ் வேலை பெறமுடியவில்லை என்ற கோபத்தில் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியால் செயல்பட்டதாக பேராசிரியர் ரோத் விளக்குகிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய அமெரிக்காவில் அரசாங்கம் நல்லதையெல்லாம் செய்யும் என்று மக்கள் நம்பினர். ஆனால் வியட்னாம் போர், மனித உரிமையின் சட்ட திட்டங்களில் நிலவிய வேறுபாடுகள் போன்றவை அமெரிக்காவைப் பிளவுபட வைத்தது. நிக்சன் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தது.

2015ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற பல கொலைகளுக்கு அப்போதைய அரசாங்கத்தின்மீது நம்பிக்கை குறைந்ததும் நீதித் துறையில் நேர்மை குறைந்ததும் போதைப் பொருள் புழக்கம் கூடியதும் காரணமென்று ரிச்சர்ட் ரோசன்பெல்ட் என்னும் குற்ற வியல் நிபுணர் கண்டுபிடித்துள்ளார். அவற்றுக்கு மற்றவர்களும் காரணமாக இருக்கக்கூடும்.

இருந்தாலும் நம்பிக்கை இருக்கும்வரையிலும் நேர்மையான, கட்டொழுங்கான, கட்டுக்கோப்பான நிர் வாகத்துடன் கூடிய மேலாண்மை இருக்கும் வரையிலும் அந்த நம்பிக்கை உறுதியாக மக்களை மேம்படுத்தும், தோழமையை வளர்க்கும். நாட்டுக்கும் நல்லன செய்யும். அதுபோல் கட்டுக்கோப்பான, கட்டுப்பாடுமிக்க தலை மைத்துவத்தின்கீழ் நீதியும் நேர்மையும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படும்போது அசம்பாவிதங்கள் குறை வாகவே நடக்கின்றன.

குறிப்பாக, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நேர்மையான ஆட்சி, மக்கள் நலன் மீதான உறுதிப்பாடு, ஆகியவை இருப்பதால் அவை உலக நாடுகளின் பாராட்டையும் நன் மதிப்பையும் பெற்றுள்ளன. 2017-10-15 06:00:00 +0800