‘கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்த பாஜக’

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்காக அக்கட்சி தனக்கு ஒரு கோடி ரூபாய் (S$210,000) தர முன்வந்த தாகவும் முன்பணமாக ஒரு மில்லியன் ரூபாய் தந்ததாகவும் பட்டேல் சமூகத் தலைவர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல் தெரி வித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கூடிய விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 1995 முதல் நடைபெற்ற ஐந்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் நீடித்து வரும் பாஜக இந்தத் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. மாறாக, இந்த முறை எப்படியும் பாஜகவை வீழ்த்தவேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கி ரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு பிரசாரத்தைத் தீவிரமாக்கியுள்ளது. வெற்றியைக் குறிவைத்துள்ள இரு கட்சிகளும் அதைச் சாத்திய மாக்கும் வகையில் சமூகத் தலை வர்களைத் தங்கள் பக்கம் இழுக் கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், குஜராத்தில் 12=13 விழுக்காட்டினராக உள்ள பட்டேல் சமூகத்தினரின் வாக்கு களை ஒட்டுமொத்தமாக அள்ளு வதில் இரு கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஏனெனில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் கிட்டத்தட்ட 50 தொகுதிகளின் முடிவை அவர்களின் வாக்குகள் தீர்மானிப்பதாக அமையும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், பட்டேல் சமூகத் தலைவர்களில் இருவர் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சி மீது லஞ்சக் குற்றம் சுமத்தி, கட்சியை விட்டே வெளியேறினர்.

பாஜகவில் இணைந்த வருண் பட்டேல் என்பவர் கடந்த சனிக் கிழமை குஜராத் பாஜக தலைவர் ஜித்துபாய் வகானியையும் மேலும் சில அமைச்சர்களையும் சந்திப்ப தற்காகத் தம்மை அழைத்துச் சென்றதாக நரேந்திர பட்டேல் தெரிவித்தார். பிறகு அவர் தன்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று, பத்து லட்ச ரூபாயைக் கொடுத்த தாகவும், "முதற்கட்டமாக இதை வைத்துக்கொள்ளுங்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டபின் இன்னும் 90 லட்ச ரூபாய் தருகிறோம்," என்று உறுதி அளித்ததாகவும் நரேந்திர பட்டேல் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!