மராவி போர் முடிந்தது

கிளார்க்: மராவியில் பயங்கரவாதி களுக்கு எதிரான போர் முடிந்து விட்டது என்று பிலிப்பீன்ஸ் தற் காப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்சானா அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மராவி நகருக்குள் அதிரடியாக நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதிகள் அந்நகரை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். இதையடுத்து பிலிப்பீன்ஸ் அர சாங்கமும் பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்கான ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியது. செய்தியாளர்களிடம் நேற்று போர் ஓய்ந்துவிட்டதாக அறிவித்த லோரென்சானா, "மராவியில் பயங்கரவாதிகள் யாருமில்லை," என்றார்.

ஆயுதப் படைகளின் தலைவர் எட்வர்டோ அனோ, மராவியில் உள்ள பள்ளிவாசல், இரு கட்டடங் களில் குறைந்தது 42 பயங்கர வாதிகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். சென்ற திங்கட்கிழமை அன்றும் மராவியில் துப்பாக்கிச் சூடும், பீரங்கிப் படைகளின் சத்தமும் நாள் முழுவதும் கேட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறியிருந்தார். இதற்கு மறுநாளே ஐந்து மாதப் போர் முடிவுக்கு வந்துள்ளதாக பிலிப்பீன்ஸ் கூறியுள்ளது. ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரெஸ்டிடுடோ படில்லா, மராவி நகரில் இன்னமும் துப் பாக்கிச் சூடு சத்தம் கேட்டாலும் பயங்கரவாதிகள் அகற்றப்பட்டுள் ளனர் என்றார். கடந்த மே 23ஆம் தேதி மராவி நகரை ஐஎஸ்ஐஎஸ் மாகாணமாக மாற்றும் நோக்கத்தில் நூற்றுக் கணக்கான பயங்கரவாதிகள் அங்கு நுழைந்தனர்.

அப்போது அவர்களைத் துடைத்து ஒழிக்கும் போரை பிலிப்பீன்ஸ் ராணுவம் தொடங் கியது. மராவி நகரில் பயங்கரவாதி களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மூண்ட போரில் இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ வீரர் கள், பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்க தற் காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், ஐஎஸ்ஐஎஸ்சுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிலிப்பீன்ஸ் அரசாங் கத்தைப் பாராட்டி உள்ளார். ஆசிய வட்டார நாடுகளுக்கு அமெரிக்காவின் கடப்பாட்டை மறு வுறுதிப்படுத்துவதற்காக தனது ஆசியப் பயணத்தைத் தொடங்கி யிருக்கும் வேளையில் திரு மேட்டி சின் பாராட்டு வெளியாகியுள்ளது. "அங்கு சென்றதும் முதல் வேலையாக மராவி நகரை மீட்ட பிலிப்பீன்ஸ் ராணுவத்தைப் பாராட் டுவேன்," என்று பிலிப்பீன்ஸ் புறப் படுவதற்கு முன்பு செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் லோரென்சானா, மராவியில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான ஐந்து மாத போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அறிவித்தார். உடன் ஆயுதப் படைகளின் தலைவர் எட்வர்டோ அனோ. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!