பிரியாவுக்குக் குவியும் வாய்ப்புகள்

'எதிர்பாராமல் நடக்கிறது' சின்னத்திரை மூலம் ரசிகர்களின் மனதில் ஏற்கெனவே இடம்பிடித்துவிட்ட பிரியா பவானி சங்கர் இப்போது வெள்ளித்திரை நாயகியாகி விட்டார். மேயாத மான் படத்திற்குப் பிறகு இவருக்கான வாய்ப்புகள் மளமளவெனக் குவியும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

தன் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்றும் எல்லாமே எதிர் பாராதவிதமாக நடந்துவருவதாகவும் சொல்கி றார் பிரியா. இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தானாம். பொறியியல் பட்டதாரி. ஆனால் தொடக்கம் முதலே ஊடகத்துறை மீதுதான் விருப்பம் இருந்திருக்கிறது. அதனால் கல்லூரியில் படித்தபோதே பகுதி நேரமாக ஊடகத்தில் பணியாற் றியவர், தந்தை கொடுத்த ஊக்கம் காரணமாக படிப்பை முடித்ததும் முழு நேர ஊடகப் பணிக்கு வந்துள்ளார்.

"தொடக்கத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நன்கு அனுபவம் பெற்ற பின்னர் வேலையை விட்டுவிட லாம் என்று தோன்றியது. "அப்போதுதான் 'கல்யா ணம் முதல் காதல் வரை' தொலைக்காட்சித் தொடர் வாய்ப்பு வந்தது. அப்போது தொடரில் நடிக்கும் எண்ணம் அறவே இல்லை. அதனால், முதலில் மறுத்தேன்.

"தொடர் தயாரிப்புத் தரப்பில் இருந்து, 'வெறும் பத்து நாள் மட்டும்தான் படப் பிடிப்பு... நீங்கள் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்' என்றனர். சரி, பத்து நாள்தானே என்று நடிக்க வந்தேன். "அப்போது எனக்கு தொலைக்காட்சித் தொடரும் கூட பகுதிநேரப் பணிதான்.

ஏனெனில், அப்போது எம்பிஏ பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தப் படப்பிடிப்பு பத்து நாட்களைக் கடந்து இரண்டு ஆண்டுகள் நீடித்தது," என்கிறார் பிரியா. தொடரில் நடித்தபோதே சினிமா வாய்ப்புகள் தேடி வந்தனவாம். ஆனால் அவற்றை எல்லாம் தவிர்த்துள்ளார் பிரியா.

தொடரில் இருந்து விலகி ஏறத்தாழ ஆறு மாத காலம் வீட்டில் சும்மாதான் இருந்தாராம். அச்சமயம் தான் நடிக்க மறுத்த படங்களைத் திரையில் பார்த்த போது, 'பேசாமல் நாமே நடித்து இருக்கலாமே?' என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகுதான் சினிமாவிலும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார். சரியாக, அதே சமயத்தில் 'மேயாத மான்' பட வாய்ப்பு தேடி வர, பிரியாவும் ஒப்புக்கொள்ள, இப்போது வெள்ளித்திரை நாயகிக ளில் ஒருவராகிவிட்டார்.

"இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் என்றதும் எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம், அவர் பெரிய இயக்குநர். நல்ல படங்களைத் தரக்கூடியவர். அவரே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, அதில் விஷயம் இல்லாமல் இருக்காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!