ஆசியான் கூட்டத்துக்கு சிங்கப்பூர் தலைமை பொறுப்பு

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா வில் நடைபெற்ற 11வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் மற்றும் 4வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் பங்காளிகள் கூட்டத்துக்கு இடையே சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், இந்தியத் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இரு அமைச்சர்களும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான, நீண்ட கால தற்காப்பு உறவை மறு வுறுதிப்படுத்தியதுடன் திருத்தம் செய்யப்பட்ட தற்காப்பு ஒத்து ழைப்பு உடன்பாட்டின் அம்சங் களை நடைமுறைப்படுத்த தங்கள் கடப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர். இதன் தொடர்பில் முதலாவது தற்காப்பு தொழில்துறை பணிக் குழுக் கூட்டம் 2016 மே மாதத் தில் நடைபெற்றது. அதன் பின் னர், சிங்கப்பூர்-இந்திய தற்காப்பு அமைச்சர்கள் கலந்துரையாடல் 2016 ஜூன் மாதத்தில் நடந்தது.

2வது தற்காப்பு அமைச்சர்கள் கலந்துரையாடலில் பங்கேற்க டாக்டர் இங் அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்வார் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.p இதற்கிடையே, ஆசியான் தற் காப்பு அமைச்சர்கள் கூட்டத் துக்கு சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் நேற்று தலைமை ஏற்றார். அப்போது பேசிய அவர், சிங்கப்பூர் இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்றார். வட்டார அளவில் பயங்கர வாதத்துக்கு எதிரான ஒத்து ழைப்பை வலுப்படுத்துதல், ஆகா யம் மற்றும் கடற்துறை பகுதி களில் செயல்முறை நடவடிக்கை களுக்கான நம்பிக்கையைப் பலப் படுத்துதல் ஆகியவையே அந்த இரண்டு அம்சங்கள். அதேவேளையில், ஆகாயம் மற்றும் கடற்பகுதிகளில் அசம்பா விதங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முயற்சிகளிலும் சிங்கப்பூர் அதிக கவனம் செலுத்தும் என்று அமைச்சர் இங் எங் ஹென் வலி யுறுத்தினார்.

மணிலாவில் நடைபெற்ற சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் (இடது) இந்தி யத் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதா ராமனும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். படம்: தற்காப்பு அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!