இந்திய சாலைகள் மேம்பட ரூ.7 லட்சம் கோடி திட்டம்

இந்தியாவில் ரூ.6.9 லட்சம் கோடி (S$147 பி.) செலவில் ஏறக்குறைய 83,000 கி.மீ. சாலைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் பிரம்மாண்ட திட்டம் ஒன்றைத் தீட்டி யிருக்கிறது. அந்தத் திட்டத்தை மத்திய அரசாங்கம் நேற்று அங்கீகரிக்க இருந்தது. அடுத்த ஐந் தாண்டு காலத்தில் நாடு முழுவ தும் அந்தத் திட்டத்தை அமல் படுத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் மத்திய அரசின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக் கிறார்கள். 'பாரத்மாலா' என்ற புதிய 28,400 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலையை எல்லைப் பகுதி நெடுகே அமைத்து அதன்மூலம் அனைத்துலக, துறைமுக, கட லோர சாலைத் தொடர்பை ஏற் படுத்துவதும் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும்.

நாட்டின் முக்கியமான பொரு ளியல் மற்றும் வர்த்தக மையங் களை இணைக்கின்ற நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்கும். ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்ட நான்கு தட சாலைகளை உருவாக்கி போக்குவரத்தை வேகப்படுத்து வது இந்த முழுத் திட்டத்தின் ஒருமித்த கவனமாக இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் சாலைகள் சரியில்லாமல் இருப் பதாலும் அகலம் இல்லாமல் குறுகி இருப்பதாலும் ஒரு சரக்கு வாகனம் நாள் ஒன்றுக்குச் சரா சரியாக 250 கி.மீ. முதல் 300 கி.மீ. வரைதான் செல்கிறது. ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒரு வாகனம் நாள்தோறும் 700 கி.மீ. முதல் 800 கி.மீ. செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!